சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு - சுகாதாரத்துறை தெரிவிப்பு

நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார்.

இதேவேளை,சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராரமையினால் அந்த மருந்துகள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டிற்கான மருந்து தேவையில் 300 வகையான மருந்துகளே தயாரிக்கப்படுகின்றன. சுமார் 20 ஆயிரம் வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அந்நிய செலாவணி நெருக்கடியினால் மருந்து விநியோகத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள போதும், அரசாங்கம் இதுபற்றி முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டின் மருந்து விநியோகத்தில் இடையூறு ஏற்படவில்லை என்றும் மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் துஷித்த சுதர்சன மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)




சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு - சுகாதாரத்துறை தெரிவிப்பு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு - சுகாதாரத்துறை தெரிவிப்பு Reviewed by Editor on December 04, 2022 Rating: 5