தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய கால முதலீட்டிற்காக தபால் துறையில் சேர தனியார் துறையினரை அழைப்பதாகவும் அவர் கூறினார்.
மத்துகம தபால் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தபால் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே தனியாரிடமிருந்து உரிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினரின் உதவியை நாடும் தபால் திணைக்களம்
Reviewed by Editor
on
December 04, 2022
Rating:
