2023ஆம் ஆண்டு இலங்கை திருநாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக சீன அரசு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.
இந்த நன்கொடையின் மூலம் நாட்டின் வருடாந்த சீருடை துணி தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நன்கொடையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ள சீருடை துணிகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 5 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சீருடைகளின் முதல் பகுதி ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு சீனா அரசு வழங்கும் நன்கொடை
Reviewed by Editor
on
December 20, 2022
Rating:
