அல்- முனீரா பாடசாலையின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

(றிஸ்வான் சாலிஹு)

அட்டாளைச்சேனை அல்- முனீரா பெண்கள் உயர்தர பாடசாலையில் GEMP செயற்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான வள நிலையம் இன்று (13) செவ்வாய்க்கிழமை, அக்கரைப்பற்று வலயக் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ்  அவர்களினால் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் ஏ.சீ.நியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர்கள்,  உதவி கல்வி பணிப்பாளர்கள், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான ஆசிரிய ஆலோசகர், பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இச்செயற்திட்டம் சுமார் 2 மாத கால முயற்சிக்கு பின்னர் கிடைத்ததொரு அங்கீகாரம் என்பதோடு, கல்வியிலும், ஒழுக்கத்திலும் நல்லதொரு மாணவ சமூகத்தை எதிர்காலத்தில்  உருவாக்கும் அனைவராலும் போற்றக்கூடிய செயற்திட்டம் இது என்று இதற்கு பொறுப்பான ஆசிரியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









அல்- முனீரா பாடசாலையின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது அல்- முனீரா பாடசாலையின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on December 13, 2022 Rating: 5