(ஏ.பி.எம்.அஸ்ஹர், பாறுக் ஷிஹான், சர்ஜுன் லாபீர்)
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பதியமிட்டோருக்கான கெளரவமும், விளைந்த பயிர்களின் மீளிணைவும். எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தரம் 06 தொடக்கம் 11 வரை ஒரே வகுப்பில்(G-வகுப்பு) கல்வி கற்ற மாணவர்களின் ஒன்று கூடல் பாடசாலையின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் தொழிலதிபரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான எச்.எச்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதோடு நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, அத்துடன் இம்மாணவர்களினால் இக்கல்லூரியின் தேவை கருதி கணனி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒய்வுபெற்ற மற்றும் தற்போதும் சேவையிலுள்ள ஆசிரியர்கள் தங்களின் கடந்தகால அனுபவங்களை இச்சபையில் பகிர்ந்து கொண்டனர். இங்கு கலை,கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக விசேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
December 19, 2022
Rating:







