அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய உதவி பிரதேச செயலாளராக, தமன பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த வை. றாசீத்  இன்று (27) அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். முஹம்மட் அன்ஸார் முன்னிலையில் அவர் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், புதிய உதவி பிரதேச செயலாளர் அவர்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரவேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.






அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம் Reviewed by Editor on December 27, 2022 Rating: 5