(செயிட் ஆஷிப்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான புதிய பணிப்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் சர்வதேச விவகாரங்களில் நீண்ட கால அனுபவமிக்கவராவார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் பிரிவின் கீழ் மனித உரிமை ஆராய்ச்சியாளராக பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
இவர் இந்த பதவிக்காக நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட பரீட்சையில் ஐந்து பேர் சித்தியடைந்திருந்தனர், இந்த ஐவரில் இவரும் ஒருவராவார்.
இதன் பின்னர் இவர் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறான அனுபவத்தை கொண்ட மாஹிருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை, இந்த பொறுப்பை வழங்கியுள்ளமை பொருத்தமானதே என்று கட்சியின் ஆதரவாளர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
December 11, 2022
 
        Rating: 
 