(பின்த் அமீன்)
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு "ஸாஹிரா நடைபவணி" இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது .
பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இவ்நடைபவணியில் குதிரை, யானை , கணரக வாகனங்கள் மற்றும் விநோத ஆடைகளில் கண்கவர் பொம்மை ஆடை தாங்கிய மனிதர்கள் என பல வகையான சுவாரஷ்ய நிகழ்வுகள் மாவனல்லை நகரை வலம் வந்து ஸாஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது.
இலங்கையின் நாலா பக்கங்களிலும் இருந்து வந்து கல்வி கற்ற இப்பாடசாலையின் மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக்கொடி என்ற பெருமையை சுமந்த ஸாஹிரா கல்லூரியின் 250 மீற்றர் நீளமான பாடசாலைகொடி கல்லூரியின் 83ஆம் batch இனால் தயாரிக்கப்பட்டு 100 ஸாஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
December 11, 2022
Rating:

