உயிரிழப்பின் பின்னர் வருந்துவதில் எந்த பயனுமில்லை - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தெரிவிப்பு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் இளம் மரணங்கள் ஏற்பட்டு பெரும் ஒரு மனக்கவலையை இப்பகுதி மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.

டெங்கு நுளம்பு பரவாமலும், அதனை எவ்வாறு தடுப்பது தொடர்பில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உங்கள் சுற்றுப்புறங்களில் அதிகமாக கவனம் செலுத்துங்கள் ஏனெனில் உயிரிழப்பு ஏற்பட்டதன் பின்னர் நாம் வருந்துவதில் எந்தவித பயனில்லை.

'டெங்கு' நுளம்பு பரவலைத் தடுப்பதன் மூலம் உங்களையும் உங்கள் நேசத்திற்குரியவர்களினையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இன்றைய தினமே ஒவ்வொருவரும் சுமார் அரை மணி நேரம் செலவிட்டு உங்கள் வீட்டினையும் சுற்றுப்புறங்களினையும் பார்வையிட்டு நுளம்பு பெருவதற்கான  ஏதுவான பொருட்களினை அகற்றி அவ்விடங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.

பீலி, கிணறு, நீர்கசிவிற்கான பாத்திரம், 'மணி'ப்பூகண்டு பாத்திரம், சுரட்டைகள், தயிர், யோகட் கப்கள், பாவிக்கப்படாத மலசலகூடங்கள், டயர்கள், இது போன்று நீர் தேங்கக்கூடிய பொருட்கள் பொருட்களை தேடி அகற்றிக் கொள்வதனால் நீங்கள் உங்களையும் உங்கள் சந்ததியினரையும், உங்கள் உறவுகளையும் இப்பெரிய உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்தோடு, இப்பிரதேசத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் தனியார் துறையினர் அனைவரும் தங்களுடைய இடங்களையும் டெங்கு பரவாமலும் இருக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முடியுமான வரை பொது அமைப்புகள், உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள், புத்திஜீவிகள், சமூக சேவை அமைப்புகள் ஒன்றினைந்நு பொதுமக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறும் டாக்டர் காதர் மேலும் தெரிவித்துக் கொண்டார்.




உயிரிழப்பின் பின்னர் வருந்துவதில் எந்த பயனுமில்லை - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தெரிவிப்பு உயிரிழப்பின் பின்னர் வருந்துவதில் எந்த பயனுமில்லை - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தெரிவிப்பு Reviewed by Editor on December 09, 2022 Rating: 5