அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறி ஆரம்ப நிகழ்வு

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் பூரண அணுசரணையுடன் நடாத்தப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் ஆரம்ப நிகழ்வும் முதல் வகுப்பும்  வியாழக்கிழமை (01) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபிர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், கணக்காளர்  ஏ.எல்.எம். றிபாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். மஜீட், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம். நழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் ஏ.எல். ஜௌபர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.சி.எம். றகீப் மற்றும் அரச கரும மொழி திணைக்கள வளவாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்ட 80 அரச உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறி ஆரம்ப நிகழ்வு அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறி ஆரம்ப நிகழ்வு Reviewed by Editor on December 03, 2022 Rating: 5