அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இடைநிறுத்தம், புதிய உறுப்பினர் நியமனம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் ஜனாப். மீரா லெப்பை அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்ஸில் ஆகியோர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினராக ஏலவே செயற்பட்ட ஒருவர் கட்சிக்கு எதிராக செயற்பட்டமையினால் கட்சியின் யாப்பு விதிகளினடிப்படையில் கட்சியினால் இடைநிறுத்தப்பட்டு இவ்வாறு புதிய உறுப்பினர் நியமனம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கட்சியின் ஆதாரவாளர்கள் முக்கியஸ்தர்களென பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட இம்முன்மாதிரியான செயற்பாட்டை பாராட்டியும் பேசியிருந்தனர்.




அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இடைநிறுத்தம், புதிய உறுப்பினர் நியமனம் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இடைநிறுத்தம், புதிய உறுப்பினர் நியமனம் Reviewed by Editor on December 05, 2022 Rating: 5