விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நாட்டில் நிலவிய வானிலையின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (09) அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு Reviewed by Editor on December 11, 2022 Rating: 5