பாதுகாப்புத் தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களின் கைவேலைகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி வைப்பு!
(அபு அலா)
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற திருகோணமலை பாதுகாப்பு தொழில் பயிற்சி நிலையத்தில், பாதுகாப்புத் தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களுக்கு 4 மாதகால தையல் மற்றும் கைவேலை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த சிறுவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (06) குறித்த நிலையத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் (திருமதி) றிஸ்வானி றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சமூக நலன்புரி சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கைவேலைப் பொருட்களின் காட்சிக்கூடத்ததை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) என்.எஸ்.திரவியநாதன், நிலையத்தின் பொறுப்பதிகாரி (திருமதி) ஏ.சுதர்ஷனி, தையல்பயிற்சி ஆசிரியர் (திருமதி) துஷ்யந் சஞ்ஜா உள்ளிட்ட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாதுகாப்புத் தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களுக்கு குறித்த நிலையத்தில் இப்பயிற்சி தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பித்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
December 08, 2022
 
        Rating: 
 




