(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் தலைவரும், அக்கரைப்பற்றின் முதலாவது வைத்தியருமான டாக்டர் எம்.ஏ.றகீஸ்து இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை சுகயீனமுற்றிருந்த வேளையில் காலமானார்.
இவர், முன்னாள் கிழக்கு உட்கட்டமைப்பு அமைச்சின் சுகாதார பிரிவிற்கான பணிப்பாளராக இருந்து கிழக்கு பிராந்திய வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு வழிவமைத்ததோடு, அக்கரைப்பற்று வைத்தியசாலை "ஆதார வைத்தியசாலையாக" உயர்வடைவதற்கு முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுடன் ஒன்றினைந்து செயற்பட்டவராவார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இன்னும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், அதற்காக தற்போது இருக்கும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் சகல தரப்பினருடனும் பேசி பல திட்டங்களை பல மட்டங்களோடும் ஆலோசித்தும், இவ்வைத்தியசாலையின் ஆரம்பத்திற்கும் அபிவிருத்திக்காகவும் முழுமூச்சாக இவர் செயற்பட்டார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அக்கரைப்பற்றில் நடைபெறும்.
 
        Reviewed by Editor
        on 
        
March 05, 2023
 
        Rating: 
 