(றிஸ்வான் சாலிஹு)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் இவ்வாண்டிற்கான "சிறந்த முகாமைத்துவ அலுவலமாக" தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.
“நீர் மற்றும் துப்பரவேற்றப்பாட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தைத் துரிதப்படுத்தல்” எனும் தொணிப்பொருளில் கொழும்பில் புதன்கிழமை (22) நடைபெற்ற உலக நீர் தின பிரதான வைபவத்தில் இதற்கான கௌரவத்தை அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜீத் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் கீழுள்ள சகல பிராந்திய முகாமையாளர் காரியாலயங்களிலும் இருந்து சிறந்த முகாமைத்துவ முகாமையாளர் காரியாலயமாக இக்காரியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இச்சாதனைக்கு உழைத்த சகல ஊழியர்களுக்கும் அக்கரைப்பற்று முகாமையாளர் யூ.கே.எம்.முஸாஜீத் நன்றி தெரிவித்துள்ளார்.
 
        Reviewed by Editor
        on 
        
March 23, 2023
 
        Rating: 
 