(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று அல்-அப்றார் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் முதலாவது றமழான் கால விஷேட மார்க்கச் சொற்பொழிவும் இஸ்லாமிய நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்று மீராநகர் நீர்ப்பூங்கா கட்டிட மண்டபத்தில் மன்றத்தின் பிரதித்தலைவர் எஸ்.எம்.அபுல் ஹாசீம் அஸ்ஹரி அவர்களின் ஒழுங்கமைப்பில், மன்றத்தின் தலைவர் ஏ.பீ.நூரூல்லா தலைமையில் நடைபெற்றது.
புனித ரமழான் மாதம் முழுவதும் காலை வேளையில் இப்பிரதேசத்தில் உள்ள தலைசிறந்த உலமாக்களை கொண்டு ஆண்கள் பெண்களுக்காக விசேட இஸ்லாமிய மார்க்க விடயங்களை போதிப்பதோடு நல்லதொரு இளைஞர் சமூதாயத்தை கட்டியெழுப்புவதே இந்த அமைப்பினரின் நோக்கமாக இருக்கின்றது.
அங்குரார்ப்பண நிகழ்வில் முதலாவது தின விசேட சொற்பொழிவை அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அரபுக்கல்லூரியின் அதிபர் எம்.எம்.கலாமுல்லா (றஸாதி) நிகழ்த்தியதோடு, இந்நிகழ்வில் அக்கரைப்பற்று உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எம்.எம்.அப்துல் லெத்தீப், அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர், மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
        Reviewed by Editor
        on 
        
March 31, 2023
 
        Rating: 
 .jpg)
.jpg)